/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச இளைஞர் இருவர் கைது
/
சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச இளைஞர் இருவர் கைது
சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச இளைஞர் இருவர் கைது
சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச இளைஞர் இருவர் கைது
ADDED : மே 10, 2024 01:46 AM

அன்னுார்;அன்னுார் அருகே உரிய ஆவணங்கள் இன்றி, தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
அன்னுார் வட்டாரத்தில் அதிக அளவில் பவுண்டரிகள், ஸ்பின்னிங் மில்கள் செயல்படுகின்றன. இங்கு பணிபுரியும் வெளிமாநிலத்தவர்கள் குறித்த ஆவணங்களை தொழிற்சாலை நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அன்னுார் போலீசார் தொழில் நிறுவனங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் மாணிக்கம் பாளையத்தில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது அர்ஜு 26, போனஸ் பர்மன் 28, ஆகிய இருவர் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் அன்னுார் போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர்.
இவர்கள் 2012ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்து திருப்பூரில் டெய்லராக பணிபுரிந்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு அன்னுாரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.