/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இரு கண்டக்டர்கள் அடிதடி
/
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இரு கண்டக்டர்கள் அடிதடி
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இரு கண்டக்டர்கள் அடிதடி
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இரு கண்டக்டர்கள் அடிதடி
ADDED : மார் 13, 2025 06:17 AM
கோவை; காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ் நடத்துநரை தாக்கிய, மற்றொரு தனியார் பஸ் நடத்துநர் கைது செய்யப்பட்டார்.
காரமடை, சி.எம்.கே., நகரை சேர்ந்தவர் அரவிந்தன், 22. இவர் கோவை - மேட்டுப்பாளையம் இடையே ஓடும் தனியார் பஸ்சில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அரவிந்தன் பணியாற்றும் பஸ் நேற்று முன்தினம் காலை, மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு காந்திபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
பஸ் துடியலுார் வந்த போது, மற்றொரு பஸ்சும் அதே நேரத்தில் துடியலுார் வந்துள்ளது. இதனால், அரவிந்தன் மற்றும் மற்றொரு பஸ் நடத்துநரான சஞ்சீவ் குமார், 19 இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
இரண்டு பஸ்களும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தன. அப்போது, சஞ்சீவ் குமார் பஸ்சில் இருந்து இறங்கி, அரவிந்தனை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதையடுத்து, அவர் கையில் அணிந்திருந்த 'காப்பு' மோதிரம் பயன்படுத்தி அரவிந்தன் முகத்தில் தாக்கினார். சம்பவம் குறித்து அரவிந்தன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சஞ்சீவ் குமார் மீது, வழக்கு பதிந்து கைது செய்தனர்.