/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா கடத்திய இருவர்: பாய்ந்தது 'குண்டாஸ்'
/
கஞ்சா கடத்திய இருவர்: பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 10, 2024 01:43 AM
கோவை;கோவை தடாகம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விற்பனைக்காக, 12 கிலோ கஞ்சாவை கடத்திய நபரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த கமருனீஷா, 51 எனத் தெரிந்தது.
அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் கோவை கலெக்டர் கிராந்திகுமாருக்கு பரிந்துரைத்தார்.
இதை ஏற்று கலெக்டர் கமருனீஷாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல், மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், 11 கிலோ கஞ்சாவை கடத்திய ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி, 49 என்பவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

