தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கார்கள் மோதல் இருவர் பலி

கார்கள் மோதல் இருவர் பலி

கார்கள் மோதல் இருவர் பலி


ADDED : ஜூன் 18, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: அன்னூர் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், இருவர் இறந்தனர். பா.ஜ., மாவட்டத் தலைவர் உள்பட ஏழு பேர் காயம் அடைந்தனர்.

பொன்னே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் மாரிமுத்து. பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர். நேற்று மதியம் இவரும், குடும்பத்தினரும் பண்ணாரியில் இருந்து அன்னூருக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர். மன்னார்குடியை சேர்ந்த பரசுராம் உள்ளிட்ட நான்கு பேர் அன்னூரில் இருந்து புளியம்பட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்,

செட்டியார் மில் பஸ் ஸ்டாப் அருகே இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் புளியம்பட்டிக்கு சென்ற காரில் இருந்த மன்னார்குடியை சேர்ந்த பரசுராம், 42. பழனிவேல், 52. ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து, அன்னூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்.

அதே காரில் பயணித்த விக்ரம், 23. சதீஷ், 22. ஆகியோர் படுகாயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அன்னூர் நோக்கி சென்ற காரில் பயணித்த பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, 42. ஜோதிமணி, 38. பண்ணாரி, 60. ருக்மணி, 58. முருகன், 36. ஆகிய ஐந்து பேரும் காயமடைந்து திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் அப்பகுதியில் மொபட் ஓட்டிச் சென்ற கரியா கவுண்டனூரைச் சேர்ந்த தேவணன், 73. என்பவரும் காயமடைந்தார்

இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us