ADDED : ஆக 19, 2024 01:34 AM
வால்பாறை;வால்பாறையில், இருவேறு காரணங்களால் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வால்பாறை அடுத்துள்ள கவர்க்கல் டீ எஸ்டேட்டைச்சேர்ந்தவர் கனகமணி. தி.மு.க., வைச்சேர்ந்த இவர், இரண்டாவது வார்டு நகராட்சி கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் குமார், 50. டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இவர் வயிற்றுவலி காரணமாக கடந்த, 9ம் தேதி தேயிலை செடிக்கு அடிக்கும் களைக்கொல்லி மருந்தை குடித்தார். ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன் தினம் இறந்தார். இது குறித்து, காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெயிண்டர் தற்கொலை
வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச்சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மகன் சிவன், 30. பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

