/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒர்க் ஷாப், ஓட்டலில் தீ விபத்து இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசம்
/
ஒர்க் ஷாப், ஓட்டலில் தீ விபத்து இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசம்
ஒர்க் ஷாப், ஓட்டலில் தீ விபத்து இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசம்
ஒர்க் ஷாப், ஓட்டலில் தீ விபத்து இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசம்
ADDED : ஆக 13, 2024 01:19 AM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே நேற்று காலை நடந்த தீ விபத்தில் ஓட்டல் மற்றும் இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாயின.
பெரியநாயக்கன்பாளையம் வண்ணான் கோவில் பிரிவு அருகே உதயகுமார், ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.
அருகே சம்பத் என்பவர் இருசக்கர வாகன பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு ஓட்டல் மற்றும் இருசக்கர வாகன ஒர்க் ஷாப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், ஓட்டலில் இருந்த மளிகை சாமான்கள், சேர், டேபிள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.
இதே போல ஒர்க் ஷாப்பில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.