ADDED : ஜூன் 20, 2026 02:21 PM
அ நிறம் | அளவு
கோவை: அவிநாசி ரோட்டில், எஸ்ஸோ பங்க் மற்றும் பயனியர் மில் சந்திப்பில் யூ டர்ன் முறை இருந்தது. பீளமேடு மற்றும் பாரதி காலனி பகுதி மக்கள் யூ டர்ன் முறையை அகற்றி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஆட்டோமேடிக் சிக்னலை அமல்படுத்தக் கோரினர்.
5 நாட்களுக்கு ஆட்டோமேடிக் சிக்னல் முறையை, பரீட்சார்த்த முறையில் போலீசார் செயல்படுத்தினர். போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
முந்தைய யூ டர்ன் முறையே வசதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவை அடுத்து, யூ டர்ன் முறை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
