sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., சபரிமாலா மீது ஏன் நடவடிக்கை இல்லை?

/

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., சபரிமாலா மீது ஏன் நடவடிக்கை இல்லை?

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., சபரிமாலா மீது ஏன் நடவடிக்கை இல்லை?

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., சபரிமாலா மீது ஏன் நடவடிக்கை இல்லை?

16


UPDATED : செப் 11, 2024 03:40 AM

ADDED : செப் 11, 2024 03:37 AM

Google News

UPDATED : செப் 11, 2024 03:40 AM ADDED : செப் 11, 2024 03:37 AM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'மதப்பிரசாரம் செய்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மற்றும் சபரிமாலா ஆகியோர் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என, தி.மு.க.,விடம் கேள்வி கேட்க, மற்ற கட்சியினருக்கு ஏன் தைரியம் வரவில்லை' என்ற கேள்வியை, முன்வைத்துள்ளார் பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

Image 1319585


சென்னையில் அரசு பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில், ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக, கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதேநேரம், மாணவர்கள் மத்தியில் கிறிஸ்தவ மதத்தை திணித்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மற்றும் இஸ்லாமிய கருத்துக்களை பரப்பி வரும் சபரி மாலா ஆகியோர் மீது, தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஏனெனில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான உமாசங்கர், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குச் சென்று, கிறிஸ்தவ மதத்தை பரப்பி வருகிறார்.

Image 1319586


இதேபோல், சபரிமாலா என்பவர், இஸ்லாமிய மத பிரசாரம் செய்து வருகிறார். இவ்விரண்டு நிகழ்வுகளும் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது; இவர்களது வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பா.ஜ.,மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது:


இந்து பேச்சாளர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் மீது, வழக்கு தொடுப்பது தி.மு.க., ஆட்சியில் எப்போதும் நடக்கும். மத நம்பிக்கை, பாவ புண்ணியங்கள் பற்றி பேசியவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, மற்ற மதத்தினரை தாஜா செய்வதற்கு, மிகப்பெரிய ஆயுதமாக தி.மு.க., பயன்படுத்துகிறது.

சிறுபான்மையினரை தாஜா செய்து, அவர்களுக்கு வேண்டியதை அள்ளி விட்டு, ஓட்டு வங்கியை தன் வசம் முழுமையாக வைத்திருக்கிறது. மகா விஷ்ணு மீது வழக்குகள் போட்டதற்கு பா.ஜ., தவிர, வேறெந்த கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

இந்துக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கின்றனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மற்றும் சபரிமாலா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என, தி.மு.க.,விடம் கேள்வி கேட்க, கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மதசார்பற்றவர்கள் என்று சொல்பவர்கள், நடுநிலை சிறுபான்மையினருக்கு ஏன் தைரியம் வரவில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.

சதி வலையில் அமைச்சர் மகேஷ்


இதுகுறித்து, இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:


பள்ளிகளில் மாணவர்களுக்கு, நீதி போதனை வகுப்புகள் நடத்துவது வழக்கம். ஆன்மிகம் மதமாகி விடாது. ஆனால், அரசு உதவி பெறும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பள்ளிகளில், தினந்தோறும் மத பிரசாரம் நடக்கிறது; கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் கிறிஸ்தவர்கள் கைகளில், பள்ளி கல்வித்துறை சென்று விட்டது.

இவர்களது சதி வலையில், அமைச்சர் மகேஷ் சிக்கிவிட்டார். லியோனி, மனுஷ்ய புத்திரன், சுப.வீரபாண்டியன் போன்றவர்கள், கல்வித்துறையை வழி நடத்துகிறார்கள்.

சொற்பொழிாளர் மகா விஷ்ணு மதப்பிரசாரம் செய்யவில்லை. நீதி போதனை வகுப்பு நடத்தியிருக்கிறார். அவர் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசவில்லை.

ஆனால், பி.சி.ஆர்., சட்டம் போல், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி உள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதப்பிரசாரம் செய்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மற்றும் சபரிமாலா ஆகியோர் மீது, ஏன் இதுவரை நடவடிக்கை பாயவில்லை?

இவ்வாறு, அவர் கேள்வி எழுப்பினார்.






      Dinamalar
      Follow us