/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனல் பறக்கும் வெயில் தாங்க முடியலை ;பணி நேரத்தில் தளர்வு தந்தா தேவலை துாய்மை பணியாளர்கள் கோரிக்கை
/
அனல் பறக்கும் வெயில் தாங்க முடியலை ;பணி நேரத்தில் தளர்வு தந்தா தேவலை துாய்மை பணியாளர்கள் கோரிக்கை
அனல் பறக்கும் வெயில் தாங்க முடியலை ;பணி நேரத்தில் தளர்வு தந்தா தேவலை துாய்மை பணியாளர்கள் கோரிக்கை
அனல் பறக்கும் வெயில் தாங்க முடியலை ;பணி நேரத்தில் தளர்வு தந்தா தேவலை துாய்மை பணியாளர்கள் கோரிக்கை
ADDED : ஏப் 26, 2024 12:54 AM
கோவை;வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் துாய்மை பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்து வீடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் நிரந்தரமாக, 2,129 பேர், தற்காலிகமாக, 4,203 பேர் என, 6,332 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். தவிர, 795 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிபுரியும் நிலையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தற்போது தனியார் மேற்கொண்டு வருகின்றனர்.
துாய்மை பணியாளர்களுக்கு 'ரூட் சார்ட்' தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை, 6:45 முதல் மதியம், 2:30 மணி வரை இவர்கள் பணி மேற்கொள்ளும் நிலையில் தற்போது வெயிலின் தாக்கத்தால் பெரும் சிரமங்களை சந்தித்துவருகின்றனர். எனவே, பணிகளை விரைந்து முடித்து வீடு செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
உடல் நலக்குறைவு!
பாரதிய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்க(துாய்மை பணியாளர் பிரிவு) அமைப்பு செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறுகையில்,''வெயிலின் தாக்கத்தால் குறிப்பாக பெண்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். வயதானவர்களால் இந்த குப்பையில் இருந்து வரும் வெப்பம், நாற்றம், மூச்சு திணறலை ஏற்படுத்தும் வாயுக்களில் இருந்து தாக்குப்பிடிக்க முடிவதில்லை. உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் வருகின்றனர். எனவே, பணி நேரத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் தளர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
வீடு செல்ல அனுமதி
ஏ.ஐ.டி.யூ.சி., மாநில துணைத்தலைவர் செல்வராஜ் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,'வெப்பநிலை அதிகரித்திருப்பதால், கோவை மாவட்ட கலெக்டர் காலை, 11:00 முதல், 3:00 மணி வரை வெளியில் நடமாடாமல் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த வெயில் துாய்மை பணியாளர்கள், டிரைவர், கிளீனர், கொசு ஒழிப்பு பணியாளர்களை மிகவும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கும். வெப்ப அலை நீர்த்துப்போகும் வரை மாநகராட்சியின் அனைத்து தொழிலாளர்களும் காலை, 11:00 மணிக்குள்ளாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை விரைந்து முடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல தாங்கள் உத்தரவிட வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

