/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கும்'
/
'கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கும்'
'கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கும்'
'கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கும்'
ADDED : மார் 02, 2025 04:34 AM

முறையாக கட்டுப் படுத்தப்படாத சர்க்கரையால், பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார், இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.
பக்க வாதம் (stroke) என்பது, ஒரு கவலை அளிக்கும் நோய். உரிய நேரத்தில் முறையான சிகிச்சை பெறவில்லை எனில், உயிருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். நிரந்தர ஊனம் ஏற்படலாம்.
பக்கவாதம் வந்த பின் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், அபாயம் பல மடங்கு அதிகரிக்கும். முறையாக சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவில்லை எனில், சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகம்.
ஆங்கிலத்தில் பாஸ்ட் (F.A.S.T) என்ற சொல்லை நினைவில் கொள்ளுங்கள். அதன் ஒவ்வொரு எழுத்தும், பக்கவாதத்தின் ஒரு அறிகுறியைக் குறிக்கிறது.
F: Face: (முகம்)
முகம் ஒரு பக்கம் கோணலாக தெரிந்தாலோ அல்லது ஒரு பக்கம் மரத்து போனாலோ, உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். இது மிக, மிக அவசியம். திடீரென்று வாய் கோணிக்கொள்வதும் பக்கவாதம் வருவதற்கான அறிகுறியே.
A: Arms: (கை, கால் வலுவிழத்தல்)
ஒரு பக்கம் கை, கால் மரத்துப்போவதும், வலுவிழப்பதும் பக்கவாதத்தின் அறிகுறியாகும். இந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவரின் கையை உயர்த்த சொன்னால் அவரையும் மீறி, அவர் கை தளர்வாக கீழே இறங்குவதைக் கவனிக்கலாம்.
S: Speech (பேச்சு)
திடீரென்று பேச்சு குளறுவதும், சுலபமாக பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்குக் கூட, சரியாக பதிலளிக்க முடியாமல் திணறுவதும், பக்கவாதத்தின் அடையாளங்களாகும். தடுமாற்றம், சமன்நிலையை இழத்தல், மண்டைக் குடைச்சல், மோசமான தலைவலி, நினைவிழத்தல், பார்வை திடீரென்று மங்குதல்- ஆகியவை, பக்கவாதத்தின் அறிகுறிகள்.
T: Time (நேரம்)
பக்க வாதம் ஏற்பட்ட, எவ்வளவு நேரத்தில் நோயாளி மருத்துவமனைக்குப் போகிறார் என்பது மிகவும் முக்கியம். பக்க வாதம் தாக்கிய சில மணி நேரம் வரை பொன்னான நேரம் (Golden Window) எனப்படும். இப்பொன்னான நேரத்தைத் தவறவிட்டால், பக்கவாதத்தால் நிரந்தர பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
உடலின் ஒரு பக்கச் செயல்பாட்டை இழந்து விடலாம். பேசும் திறனை இழக்கலாம். சிந்திக்கும் திறன் வெகுவாகக் குறையலாம். இது போல் பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது பக்கவாதம். பக்கவாதம் தாக்கிய சில மணி நேரத்துக்குள், நரம்பியல் மருத்துவரைப் பார்த்தால் அதிக சேதாரமின்றி தப்பலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.