ADDED : ஜூலை 19, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லுாரியின் 36வது மாணவர் மன்றத் தொடக்க விழா நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
கோவை ப்ளு யாண்டர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் வெற்றி மற்றும் க்ளவுட் செயல்பாடுகள் பிரிவின் துணைத்தலைவர் மகிமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
மாணவர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த அவர் பேசுகையில், ‘‘ மாணவிகள் தலைமைத்திறன், தன்னம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்களது நேரத்தை, உழைப்பை திறமைகளை வளர்த்துக் கொள்வதில் முதலீடு செய்ய வேண்டும்,’’ என்றார்.
இதையடுத்து, தொடர்ந்து மாணவிகள் தங்களது பொறுப்புகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்ற உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
