/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடையில்லாமல் மது விற்பனை; குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு
/
தடையில்லாமல் மது விற்பனை; குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு
தடையில்லாமல் மது விற்பனை; குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு
தடையில்லாமல் மது விற்பனை; குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு
ADDED : மே 01, 2024 11:06 PM
உடுமலை : உடுமலை போலீஸ் உட்கோட்டம் குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில், 84 கிராமங்கள் உள்ளன.
போலீஸ் கட்டுப்பாட்டு பகுதியில், குடிமங்கலம், பெதப்பம்பட்டி, பூளவாடி, ராவணாபுரம், மூங்கில்தொழுவு, விருகல்பட்டி, பெரியபட்டி ஆகிய இடங்களில் 'டாஸ்மாக்' மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.
குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மதுக்கடைகள் இயங்கி வந்தாலும், அனைத்து கிராமங்களிலும், 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. சில 'டாஸ்மாக்' மதுக்கடை பார்களிலும் அனைத்து நேரங்களிலும், விதிகளை மீறி, மதுபாட்டில்கள் விற்பனையாகிறது.
பாட்டிலின் விலை இருமடங்காக விற்பனை செய்யப்படுவது 'குடி'மகன்கள் பிரச்னையாக இருந்தாலும், அதை குடித்து விட்டு, அவர்கள் செய்யும் பிரச்னை மக்களுக்கு வேதனையளிப்பதாக உள்ளது.
தொழிலாளர் தினத்தையொட்டி, மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை விட்டாலும், தடையில்லாமல், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனால், பல்வேறு குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

