/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரத்து அதிகரிப்பால் குறைந்தது காய்கறி விலை
/
வரத்து அதிகரிப்பால் குறைந்தது காய்கறி விலை
ADDED : மார் 06, 2025 11:56 PM
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டாரத்தில், வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை வெகுவாக சரிவடைந்துள்ளது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை கீரை வகைகள், வெண்டை, கத்தரி போன்ற பயிர்கள் பயிரிடப்படுகிறது.
இப்பகுதி விவசாயிகள், தாங்கள் விளைவித்த பயிர்களை, தொண்டாமுத்துார், பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, வெளி மாவட்டங்களில் இருந்தும், காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த ஒரு மாதமாகவே, காய்கறி விலை சரிவடைந்து வருகிறது. பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்றுமுன்தினம், 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, 150 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று, ஒரு டிப்பர் தக்காளி, அதிகபட்சமாக 100 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல, ஒரு கிலோ வெண்டை, 20 ரூபாய்க்கும்; கத்தரி, புடலை, பயறு, 5 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம், 30 ரூபாய்க்கும்; பச்சை மிளகாய், 20 ரூபாய்க்கும்; காளிபிளவர், 10 ரூபாய்க்கும், முட்டைகோஸ், 7 ரூபாய்க்கும் விற்பனையானது. மழை வரும் வரை, தொடர்ந்து காய்கறி விலை சரிவடையும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.