/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பர்லியார் வழியாக உள்ளூர் வாகனங்களுக்கு அனுமதி: காய்கறி வியாபாரிகள் கோரிக்கை
/
பர்லியார் வழியாக உள்ளூர் வாகனங்களுக்கு அனுமதி: காய்கறி வியாபாரிகள் கோரிக்கை
பர்லியார் வழியாக உள்ளூர் வாகனங்களுக்கு அனுமதி: காய்கறி வியாபாரிகள் கோரிக்கை
பர்லியார் வழியாக உள்ளூர் வாகனங்களுக்கு அனுமதி: காய்கறி வியாபாரிகள் கோரிக்கை
ADDED : மே 03, 2024 01:17 AM

குன்னுார்:'குன்னுார் மலைபாதை வழியாக உள்ளூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு, குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைபாதை ஒரு வழிப்பாதையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், நீலகிரியில் இருந்து சமவெளிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்படுகிறது.
எனினும், அரசு பஸ்கள், பால் உட்பட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வழிப்பாதை அறிவிப்பால், குன்னுார் 'லெவல் கிராசிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்தி மாற்று பாதையில் கோத்தகிரிக்கு திருப்பி விடுவதால், தொடர் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசாரும கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையிலான மலை பாதையில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் மட்டுமே இது போன்று போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்தி அனுப்புவதால் அந்த பகுதிகளில் அதிக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
கேத்தியை சேர்ந்த காய்கறி வியாபாரி ஹரிஹரன் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கும் கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு மலை காய்கறிகள் நாள்தோறும் லாரிகளில் சமவெளி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. லாரிகளை கோத்தகிரி வழியாக திருப்பி விடுவதால், கூடுதல் எரிபொருள் செலவு, கால விரயம் உட்பட பல்வேறு பாதிப்புகள் நீடிக்கிறது. எனவே, காய்கறிகள் லாரிகள் உட்பட உள்ளூர் வாகனங்களுக்கு பாஸ் வழங்கி, பர்லியார் வழியாக மேட்டுப்பாளையம் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.