/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை ரோட்டில் வாகனங்கள் விபத்து
/
கோவை ரோட்டில் வாகனங்கள் விபத்து
ADDED : ஏப் 11, 2024 11:57 PM
கிணத்துக்கடவு;பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு தாமரைக்குளம் பகுதியில் வால்பாறையை சேர்ந்த பரிதோஷ், 43, காரில் வந்தார். அப்போது, அவருக்கு முன் சென்ற வாகனம் சர்வீஸ் ரோட்டிற்கு திடீரென திரும்பியது. இதனால், பரிதோஷ் வாகனத்தை பிரேக் பிடித்து நிறுத்தினார்.
அப்போது, அவரது காரை தொடர்ந்து வந்த, வனத்துறை ஜீப் ஓட்டி வந்த டிரைவரும் பிரேக் பிடித்து நிறுத்தினார். அதற்கு பின்னால், வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, வனத்துறை வாகனத்தில் மோதியது. வனத்துறை வாகனம், பரிதோஷ் காரில் மோதியது.
விபத்தில் மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

