/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வித்யாலய நிறுவன தின யோகாசன போட்டிகள்
/
வித்யாலய நிறுவன தின யோகாசன போட்டிகள்
ADDED : பிப் 10, 2025 06:12 AM

பெ.நா.பாளையம், : ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா நிறுவன தினத்தையொட்டி யோகாசன போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி மற்றும் வித்யாலயத்தின் பல்வேறு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இவ்விழாவை கொண்டாடின. வித்யாலய இசை ஆசிரியர்களின் வழிபாட்டு பாடலுடன் விழா தொடங்கியது.
வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயபால் வரவேற்றார். சுவாமி விவேகானந்தர் உரையை அனைவரின் முன்னிலையிலும் முழுமையாக படித்து காட்டப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் நடந்தன. மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி செயலாளர் சுவாமி வீரகானந்தா, யோகாசனப் போட்டியை துவக்கி வைத்தார். நடுவர்களாக, யோகாசன ஆசிரியர் சேவாப்பூர் மாணிக்கம், அவினாசிலிங்கம் உடற்கல்வியியல் துறை தலைவர் வனிதாமணி, ஜி.கே.டி., பள்ளி யோகா பயிற்சியாளர் இந்துமதி ஆகியோர் பங்கேற்றனர்.
யோகாசனங்களை சிறப்பாக செய்த மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்லுாரி செயலாளர் சுவாமி தக்பாஷானந்தர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ்களும், பரிசுகளையும் வழங்கினார்.
நிகழ்வில் துறவியர், ஆசிரியர்கள், வித்யாலயா வளாகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், துறை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் தங்கமணி செய்து இருந்தார்.