/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலை எஸ்டேட்களில் கவாத்து பணி தீவிரம்
/
தேயிலை எஸ்டேட்களில் கவாத்து பணி தீவிரம்
ADDED : ஆக 21, 2024 11:44 PM

வால்பாறை : பருவமழை பெய்யும் நிலையில், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளதால், கவாத்து பணி தீவிரமாக நடக்கிறது.
வால்பாறையில், பல்வேறு எஸ்டேட்களில் மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள், கோவை, குன்னுார், கொச்சி போன்ற ஏலமையத்திற்கு அனுப்பப்படுகிறது.
வால்பாறையில், கடந்த, ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்கிறது. மழையை தொடர்ந்து பல்வேறு எஸ்டேட் பகுதியில் தேயிலை செடிகளில் கவாத்து பணி தீவிரமாக நடக்கிறது.
தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தேயிலை செடிகளில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கவாத்து பணி நடக்கிறது. தற்போது மழை பெய்வதால், பெரும்பாலான எஸ்டேட்களில் கவாத்து பணி நடக்கிறது. அதன்பின், 90 நாட்கள் கழித்து தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடுவதோடு, உற்பத்தியும் அதிகரிக்கும்,' என்றனர்.