/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சிலைகள் ஆற்றில் விஜர்சனம் போலீசார் பலத்த பாதுகாப்பு
/
விநாயகர் சிலைகள் ஆற்றில் விஜர்சனம் போலீசார் பலத்த பாதுகாப்பு
விநாயகர் சிலைகள் ஆற்றில் விஜர்சனம் போலீசார் பலத்த பாதுகாப்பு
விநாயகர் சிலைகள் ஆற்றில் விஜர்சனம் போலீசார் பலத்த பாதுகாப்பு
ADDED : செப் 08, 2024 11:32 PM

பொள்ளாச்சியில், நேற்று, பிரதிஷ்டை செய்யப்பட்ட 20 விநாயகர் சிலைகள், ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
பொள்ளாச்சியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, - ஹிந்து மக்கள் கட்சி ஹனுமன், உலக நல வேள்விக்குழு, பொதுமக்கள் என, மொத்தம், 227 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு வழிபாட்டிற்கு பின், நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
அவ்வகையில், நேற்று, பொதுமக்கள் மற்றும் அமைப்பு சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 20 விநாயகர் சிலைகள், அந்தந்த பகுதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, அம்பராம்பாளையம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
போலீசார் கூறியதாவது: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள், ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
தினமும், ஒவ்வொரு அமைப்பினரும், சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, அம்பராம்பாளையம் ஆற்றில் விசர்ஜனம் செய்து வருகின்றனர்.
நேற்று, பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் இருந்து, விசர்ஜனம் செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. அம்பராம்பாளையம் ஆற்றில், போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
உடுமலை
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், இந்து மக்கள் கட்சி சார்பில், 28 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று மாலை விசர்ஜன ஊர்வலம் துவங்கியது.
பெதப்பம்பட்டி நால்ரோட்டில் ஊர்வலத்தை, மாவட்ட தலைவர் பொன்னுசாமி துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் மணி, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் உடுமலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, சிலைகள், மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
மாநில இளைஞர் அணி தலைவர் ஓம்கார், மாநில செயலாளர் வெங்கட்ரமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விசர்ஜன ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.