/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடிய விடிய மண் கடத்துறாங்க கிராம மக்கள் புகார்
/
விடிய விடிய மண் கடத்துறாங்க கிராம மக்கள் புகார்
ADDED : செப் 03, 2024 01:53 AM

அன்னுார்;ஆத்திகுட்டை கிராமத்தில் விதிமுறைகளை மீறி விடிய, விடிய மண் எடுத்து கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
அன்னுார் வட்டாரத்தில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் மண் எடுத்து, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் விதிமுறை மீறல் நடப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,' ஆத்திகுட்டை கிராமத்தில் ஐந்து இடங்களில் மண் எடுத்து விற்கின்றனர். இதில் அரசு விதிமுறையை மீறி, 20 அடி, 30 அடி ஆழம் வரை மண் எடுக்கின்றனர். இதனால் மழை நீர் செல்லும் பாதை மறைந்து போகிறது. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது. மரம், செடி அழிக்கப்படுகிறது.
மண் எடுக்கும் போது வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. தனியார் நிலத்தில் அதிக அளவில் அதிக ஆழத்தில் மண் எடுக்கின்றனர். மிக வேகமாக இயக்கப்படும் டிப்பர் லாரிகளால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.