ADDED : ஆக 16, 2024 12:16 AM

கோவை : வாய்ஸ் ஆப் கோவை அமைப்பினர் சுதந்திர தினத்தையொட்டி பைக் பேரணி சென்றனர்.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பினர் நேற்று ஆர்.எஸ்., புரம் கிழக்கு திருவேங்கடசாமி ரோட்டில் உள்ள தி சேவாஸ்ரம் டிரஸ்டில் சுதந்திர தின கூட்டத்தை நடத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சி தலைவர் ஆர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பெற்றோரின், மாற்றுத்திறனாளி குழந்தைக்கு உதவும் வகையில் ரூ. ஒரு லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து வாய்ஸ் ஆப் கோவை அமைப்பின் தன்னார்வலர்கள், 50க்கும் மேற்பட்டோர் பைக்கில் தேசிய கொடியை ஏந்தி பேரணி சென்றனர்.
இந்த பேரணியானது சேவாஸ்ரம் டிரஸ்ட் முன் துவங்கி வடகோவை, லாலி ரோடு, வடவள்ளி சென்று திரும்பி மீண்டும் லாலி ரோடு வந்து காந்தி பார்க் வழியாக சேவாஸ்ரம் டிரஸ்டை வந்தடைந்தது.

