ADDED : ஜூன் 15, 2026 04:01 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை 2 ரூபாய் குறைந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வாரம் இருந்த விலையை விட, 2 ரூபாய் குறைந்து, 50 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் இளநீரின் விலை, 19,750 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு மற்றும் இளநீர் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்கள் இருந்தாலும், வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், ஒரு சில இடங்களில் இளநீரின் தேவை குறைந்துள்ளது.
மேலும், கடந்த மூன்று மாதங்களாக நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தால், இளநீரின் தரமும் சற்று குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
