/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்: மனுத்தாக்கல் நிறைவு
/
நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்: மனுத்தாக்கல் நிறைவு
நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்: மனுத்தாக்கல் நிறைவு
நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்: மனுத்தாக்கல் நிறைவு
ADDED : ஆக 23, 2024 12:59 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே குளப்பத்துக்குளம் ஏரி மற்றும் வரத்து கால்வாய், ஒடையகுளம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடத்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று வேட்பு மனுத்தாக்கல் பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடந்தது. ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் வந்தனர்.
வேட்பு மனு படிவங்களை, உதவி பொறியாளர் செந்தில் மற்றும் அதிகாரிகள் வழங்கினர். பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை, ஆனைமலை தாசில்தாரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான உமாதேவி பெற்றார்.
ஒவ்வொரு பதவிக்கும் ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்தனர். அதில், தலைவர் பதவிக்கு வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்த விசாகபதி, நான்கு ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிக்கு வேட்டைக்காரன்புதுார் நீலகண்டன், ஒடையகுளம் சந்துரு, ஆனைமலை ராஜமாணிக்கம், ஆனைமலை கார்த்திக்கேயன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
இன்று வேட்பு மனுக்களை கூர்ந்தாய்வு செய்தல், வேட்பு மனு பட்டியலை வெளியிடுதல் மற்றும் வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல், போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல், சின்னங்கள் வெளியிடப்பட உள்ளன. வரும், 31ம் தேதி தேர்தல் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஒரு பதவிக்கும் ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

