/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாட்டியெடுக்கும் வெயிலில் சில்லென்று காக்கும் தர்பூசணி
/
வாட்டியெடுக்கும் வெயிலில் சில்லென்று காக்கும் தர்பூசணி
வாட்டியெடுக்கும் வெயிலில் சில்லென்று காக்கும் தர்பூசணி
வாட்டியெடுக்கும் வெயிலில் சில்லென்று காக்கும் தர்பூசணி
ADDED : ஏப் 07, 2024 12:52 AM

வாட்டும் வெயிலில் தாகம் தணிக்க, கோவையில், தர்பூசணி பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.நேற்றுமுன்தின நிலவரப்படி, கோவையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.
இக்காலகட்டத்தில், உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க, அதிகளவு நீர் மற்றும் மற்றும் காய்கறிகள், பழங்களை உட்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.இந்நிலையில், கோவையில் தர்பூசணி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கிலோ 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கூட்ஷெட் ரோட்டில் விற்பனையில் ஈடுபட்டுள்ள அன்வர்பாஷா கூறுகையில், ''திண்டிவனம், மரக்காணம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, கிருஷ்ணகிரி உட்பட பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. தை முதல் சித்திரை வரை தான் இதன் விற்பனை இருக்கும். வெயிலில் தாகம் தணிக்க, பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது,'' என்றார்.