ADDED : ஆக 17, 2026 10:02 PM

கோவை: டிசைனராக விரும்பும் மாணவர்களுக்கு தொழில்நுட்பம், ஏ.ஐ., டேட்டா ஒருங்கிணைத்த புதிய கல்வி முறையை சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் மற்றும் டிசைன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்லுாரி தலைவர் ராஜ்தீபன் சுவாமிநாதன் கூறியதாவது:
ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை அனுமதியுடன் 4 ஆண்டு பி.டிசைன் படிப்புகளில் மூன்று புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
டேட்டா விஷ்வலைசேஷன், டேட்டா சயின்ஸ், கம்யூனிகேஷன் மற்றும் இண்டஸ்ட்ரியல் டிசைன், ஜெனரேட்டிவ் ஏ.ஐ., அண்ட் மிஷின் லேர்னிங் ஆகியவை மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் டிசைன் திறன்களை இணைந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றன.
நாளைய உலகம் ஏ.ஐ., உடன் இணைந்து சிந்திக்க, தொழில்நுட்பத்தைப் புரிந்து கொண்டு புதிய தீர்வுகளை உருவாக்கும் திறமையாளர்களை தேடும். அதற்காக எங்கள் கல்லுாரி அடுத்த தலைமுறை டிசைனர்கள், கிரியேட்டிவ் தொழில்நுட்ப வல்லுனர்கள், புதுமை வல்லுனர்களை உருவாக்க இப்புதிய கல்வி முயற்சியை முன்னெடுக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
