/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வலுவிழந்து வரும் கால்வாய் பாலம்: ஆனைமலை ரோட்டில் அச்சம்
/
வலுவிழந்து வரும் கால்வாய் பாலம்: ஆனைமலை ரோட்டில் அச்சம்
வலுவிழந்து வரும் கால்வாய் பாலம்: ஆனைமலை ரோட்டில் அச்சம்
வலுவிழந்து வரும் கால்வாய் பாலம்: ஆனைமலை ரோட்டில் அச்சம்
ADDED : மார் 28, 2024 04:57 AM

உடுமலை : பிரதான கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் வலுவிழந்து வரும் நிலையில், மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆனைமலை ரோட்டில் வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் அவ்வழியாக செல்ல வேண்டியுள்ளது.
உடுமலை அருகே தளியில் இருந்து ஆனைமலை செல்லும் ரோட்டில், தீபாலபட்டி அருகே, பி.ஏ.பி., பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. இவ்விடத்தில், கடந்த, 40 ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்ட பாலம், தற்போது வலுவிழந்து காணப்படுகிறது.
தடுப்பு சுவர்கள் விரிசல் விட்டு, படிப்படியாக உடைந்து விழுகிறது. இந்த ரோட்டில், தளி, மொடக்குப்பட்டி, தீபாலபட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.
மேலும், பழநி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து, குறிச்சிக்கோட்டை வழியாக ஆனைமலைக்கு இவ்வழித்தடத்தில் அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து, திருமூர்த்திமலைக்கு செல்லவும் இந்த ரோட்டையே பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு, வாகன போக்குவரத்து மிகுந்த ரோட்டிலுள்ள பாலம், வலுவிழந்து காணப்படுவது வாகன ஓட்டுநர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
வினாடிக்கு, 1,034 கன அடி தண்ணீர் செல்லும் பிரதான கால்வாய் மீதுள்ள பாலத்தை, மேம்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முழு கொள்ளளவில் தண்ணீர் திறக்கும் போது, பாலத்தின் தடுப்பு சுவர்களை தொட்டு நீரோட்டம் செல்கிறது. இதனால், கான்கிரீட் பூச்சு உதிர்ந்து விட்டது.
தடுப்புச்சுவர்களை மட்டுமாவது உடனடியாக சீரமைத்து, நடந்து செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், கண்டுகொள்ளப்படவில்லை. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து அப்பகுதியில் ஆய்வு செய்து, பாலத்தை மேம்படுத்த வேண்டும்.