/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நில அளவைத்துறை சார்பில் இணைய தளம்; 'மொபைல் ஆப்' வாயிலாக அறியலாம்
/
நில அளவைத்துறை சார்பில் இணைய தளம்; 'மொபைல் ஆப்' வாயிலாக அறியலாம்
நில அளவைத்துறை சார்பில் இணைய தளம்; 'மொபைல் ஆப்' வாயிலாக அறியலாம்
நில அளவைத்துறை சார்பில் இணைய தளம்; 'மொபைல் ஆப்' வாயிலாக அறியலாம்
ADDED : ஜூன் 12, 2024 10:12 PM
உடுமலை : நில அளவைத்துறை வாயிலாக, நிலங்கள் குறித்து விபரங்கள், வரைபடங்கள் மற்றும் விண்ணப்பம் ஆகியவை இணைய தளம் மற்றும் 'மொபைல் ஆப்' வாயிலாக அறிந்து கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக நில அளவை மற்றும் நிலவரித்திட்டதுறை சார்பில், www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பட்டா மாறுதல் 'தமிழ்நிலம்' மொபைல் ஆப் வாயிலாக இந்த இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம்.
உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை, உடனுக்குடன் செயல்படுத்த தமிழ் நிலம் (ஊரகம்), தமிழ் நிலம் (நகரம்) மென்பொருள் உருவக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக, இதற்கென 'கொலாப்லேண்ட்' என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டு, இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால், பட்டா, சிட்டா பார்வையிடவும், சரிபார்க்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், அ - -பதிவேடு, அரசு புறம்போக்கு நில விபரம், புலப்படம், நகர நிலஅளவை வரை படங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிடவும், பதிவிறக்கம் செய்ய முடியும்.
பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தால், விண்ணப்பத்தின் நிலை அறிந்து கொள்ள முடியும். ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள், விபரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டங்கள், தாலுகா, கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விபரங்கள், இத்துறையின் முக்கிய அரசு ஆணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவுமாற்றங்கள் போன்றவையும் இந்த இணைய தளம் வாயிலாக அறியலாம்.
எனவே, பொதுமக்கள் இணையதளம் மற்றும் 'தமிழ்நிலம்' மொபைல் ஆப் வாயிலாக நிலஅளவை துறை தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

