தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாரவாரம் ஆரவாரம்  

வாரவாரம் ஆரவாரம்  

வாரவாரம் ஆரவாரம்  


ADDED : ஜூன் 25, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 09:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாசகர்கள் சந்திப்பு கோவை வாசகர் சாலையும், மாவட்ட மைய நுாலகமும் இணைந்து நடத்தும், 57 வது இலக்கிய நிகழ்ச்சி. கவுதம், குமார் ஆகியோரின்தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் குறித்து கலந்துரையாடல்.

இடம்: மாவட்ட மைய நுாலகம்:

வெண்பா பயிலரங்கம் தமிழ் பாடம் கற்பித்தல், வெண்பா இயற்றுதல் பயிலரங்கம் மற்றும் மத்திய மாநில அரசுகள் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு பாராட்டு என, முப்பெரும் விழா. மரபு கவிதை எழுதும் ஆர்வம் உள்ளவர்கள், வெண்பா எழுதும் இலக்கண முறையை கற்று கொள்ள வாய்ப்பு. எழுத்தாளர்கள், கவிஞர்கள் உரையாற்றுகின்றனர்.

இடம்: பி.எஸ்.ஜி.: வானவில் சொற்பொழிவு  பி.எஸ்.ஜி. டிரஸ்ட் நடத்தும், 96 வது வானவில் சொற்பொழிவு.  கல்லுாரி இசைத்துறை மாணவர்களின் இசை நிகழ்ச்சி மற்றும் சொற்பொழிவு.  ‘அன்பெனும் பெருவெளி’ என்ற தலைப்பில்  பட்டிமன்ற பேச்சாளர் ரவிக்குமார் உரை.

இடம் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லுாரி:

திரைப்பட விழா மழைக்கால திரைப்பட விழா. ஆங்கில, தமிழ், மலையாள படங்கள், ஆவண படங்கள் திரையிடப்படும். அனுமதி இலவசம். 9843323153, 6380043633 ஆகிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இடம்: கிளஸ்ட்டர்ஸ் மீடியா கல்லுாரி: தேதி 28: கதைகள் சொல்லும் ஆடைகள் பிரபல சொகுசு ஆடை நிறுவனமான கையாரா (GAIARA)வின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புதிய உயர்தர ஆடைத் தொகுப்பான ‘டேல்ஸ் ஆப் இந்தியா’ ஆடைகள் விற்பனை கண்காட்சி.  28 மாநிலங்களின் பாரம்பரிய கலை வடிவங்கள், எம்பிராய்டரி நுட்பங்கள் மற்றும் கலாசாரக் கதைகள் சொல்லும் ஆடைகளை ஒரே இடத்தில் வாங்கலாம்.

இடம்: 7:

பெண்களுக்கான ஆடை கண்காட்சி பெண்களுக்கான நவ நாகரிக ஆடைகள் கண்காட்சி (FLO Bazar) இரண்டு நாள் நடக்கிறது. பெண் ஆடை வடிவமைப்பாளர்கள் உருவாக்கிய அதி நவீன ரகங்கள்,   அணிகலன்கள், கட்டில் படுக்கை விரிப்புகள் மற்றும் ஹேண்ட் பேக்குகள் விற்பனைக்கு கிடைக்கும். அனைத்தும் தனித்துவமான கலெக்சன்கள் என்கின்றனர்.

இடம்: சுகுணா கல்யாண மண்டபம்:

திருக்குறள் பயிலரங்கம் திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில்  தலைமைத்துவ திறன் மேம்பாட்டு சிறப்பு  பயிலரங்கம். நெஞ்சில் உருவாகும் உணர்ச்சிகளை அறிதல், உள்ளத்தின் உணர்வுகளை ஒழுங்குபடுத்துதால், எண்ணங்களை வலிமையாக்குதல் ஆகியவை தலைப்புகள். கட்டணம் ரூ.2,000.

இடம்: 63 இரண்டாம் தளம்:

ஸ்ரீ கீதா பஜன்  ஸ்ரீ கீதாபஜன் ஆஞ்சநேயர் திருக்கோவில் 3 ஆம் ஆண்டு விழா. கணபதி ஹோமம், அபிஷேக அலங்கார பூஜைகள், ஸ்ரீ கீதாபஜன் பிருந்தாவன நாட்டிய நிகழ்ச்சி மற்றும் நாள் முழுக்க அன்னதானம். தொடர்புக்கு  கீதாபஜன், 83001 12434, 86081 12434.

இடம்: பெரியகுயிலி .தேதி: 28: திருமண வரன் பதிவு திருவிழா நித்ரா மேட்ரிமோனி நடத்தும் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மணமகள், மணமகன் தேவை குறித்து பதிவு செய்யலாம். 

இடம்: பி.எஸ்.மூகாம்பிகா மினிஹால்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us