/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.3.27 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ADDED : ஜூலை 09, 2024 12:34 AM
கோவை;கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்த மனுக்களை, கலெக்டரிடம் மக்கள் அளித்தனர்.
மக்களிடமிருந்து இலவச வீடு கேட்டு, 74 மனுக்களும், வீட்டுமனைப் பட்டாவுக்கு, 227 மனுக்களும், வேலைவாய்ப்புக்காக, 12 மனுக்களும், 269 இதர மனுக்கள் என மொத்தம் 582 மனுக்கள் பெறப்பட்டன.
சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். 6 பயனாளிகளுக்கு ரூ.3.27 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், நகர்ப்புற நிலவரி மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்பு திட்ட உதவி இயக்குனர் இளவரசி, தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.