/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக பட்ஜெட்: கோவை தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
/
தமிழக பட்ஜெட்: கோவை தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
தமிழக பட்ஜெட்: கோவை தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
தமிழக பட்ஜெட்: கோவை தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
UPDATED : மார் 14, 2025 06:38 AM
ADDED : மார் 13, 2025 11:52 PM

கோவை; வரும் 2026ல் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தற்போதைய தி.மு.க., அரசின் கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், பல்வேறு தரப்பினரும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
குறிப்பாக, கோவை தொழில்துறையினர் தங்களின் நீண்டகால கோரிக்கைகள் இதில் இடம்பெறும் என நம்புகின்றனர்.
ராஜேஷ் லுந்த், தலைவர், நடராஜன், செயலாளர், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை: கோவை மாவட்டத்தில் சிப்காட் போன்று பெரிய தொழிற்பேட்டை இல்லை. மாஸ்டர் பிளானில் சேர்த்து, நிதி ஒதுக்கி, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மிக வேகமாக வளரும் கோவையின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, புறநகரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்.
கார்த்திகேயன், தலைவர், கொடிசியா: தொழில் நிறுவனங்கள் மேற்கூரை சோலார் அமைக்க 25 சதவீத மானியம் கோரியுள்ளோம். இந்த பட்ஜெட்டில் மாநில அரசு அறிவிக்கும் என நம்புகிறோம். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து, கோவைக்கு வர பெரு நிறுவனங்கள் தயாராக உள்ளன. இங்கு, இடம் இல்லை என்பதுதான் முக்கிய பிரச்னை. எனவே, 200 முதல் 400 ஏக்கர் பரப்பிலான தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும். சென்னையில் உள்ள சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) போல, கோவையிலும் பெருநகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
ஜெயபால், மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோர் கூட்டமைப்பு: தமிழக தொழில்துறையின் மிகப்பெரும் பிரச்னை மின்கட்டணம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம். மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும். குறு, சிறு தொழில்துறைக்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. தனியாக நிதி ஒதுக்கி, பட்ஜெட் சமர்ப்பிப்பது குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
பெரும் தொழிற்பேட்டை அவசியம் மேற்கூரை சோலாருக்கு 25 சதவீத மானியம் மின் கட்டணம் தான் மிகப் பெரும் பிரச்னை
ஆயத்த ஆடைத்துறைக்கு சலுகை
பிரபு தாமோதரன், கன்வீனர், ஐ.டி.எப்.,:
உற்பத்தித் துறை வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க , உற்பத்தி சார்ந்த சலுகைத் திட்டம் ஆயத்த ஆடைத் துறைக்கு அறிவித்தால் , 'சீனா பிளஸ் ஒன்' வாய்ப்பை பயன்படுத்த உதவும்.
மேலும் , மாவட்ட அளவில் தொழில் செய்வதை எளிதாக்குவதற்கான அளவீட்டை கொண்டுவந்தால், அது, தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும்
சிவகுமார், தலைவர், காட்மா: கோவையில் முக்கிய சாலைகளில் குறுந்தொழில் பேட்டைகள் அமைக்க வேண்டும். தொழில் அமைப்புகள் தாங்களே முன்வந்து, உறுப்பினர்களின் பெயரில் நிலத்தைப் பதிவு செய்து குறுந்தொழில்பேட்டைகள் அமைக்கும்போது, பதிவு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.
குறுந்தொழில் பேட்டைகள் தேவை
கோவையில் தொழில்நுட்ப உதவி மையம் அமைக்க வேண்டும். அரசூரில், அரசு கோழிப்பண்ணை இடத்தை தமிழக அரசு, மத்திய அரசுக்கு வழங்கியது. அங்கு தொழில்நுட்ப மையம் அமைக்க ஆயத்தம் நடந்தது. அப்பணிகள் கிடப்பில் உள்ளன. மீண்டும் துவங்க வேண்டும்.
சவுந்தரகுமார், தலைவர், கவுமா: சிட்கோ தொழிற்பேட்டை துவங்கி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதன்பிறகு புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கவே இல்லை. இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
'பீக் ஹவர்' கட்டணம் வேண்டாமே
மேற்கூரை சோலாருக்கு மின்வாரியம் கையாளும் கட்டணம் வசூலிக்கக்கூடாது. நிலைக்கட்டணம், பீக் ஹவர் கட்டணங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
மணிராஜ், தலைவர், கோப்மா: விசைத்தறிக்கு 3ஏ2 மின் கட்டணம் வசூலிப்பதைப் போல, 10 கிலோவாட்டுக்குக் கீழ் மின்சாரம் பயன்படுத்தும் தொழில்களுக்கும் அதே கட்டண விகிதத்தைப் பின்பற்ற வேண்டும். பம்ப்களுக்கு, தரச்சான்று பெறுவதற்கான பரிசோதனை செய்ய, இலவச ஆய்வுக் கூடம் அமைத்துத் தர வேண்டும். முதல்வர் இதுதொடர்பாக 2016ல் வாக்குறுதி அளித்திருந்தார். அதை தற்போதாவது செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
ஜேம்ஸ், தலைவர், டேக்ட்:
இலவச பரிசோதனைக் கூடம் முதலீட்டு மானியம் விரைவுபடுத்தணும்
குறுந்தொழில்பேட்டை அமைக்க வேண்டும். மாவட்ட தொழில்மையத்தின் வாயிலாக வழங்கப்படும் முதலீட்டு மானியம் பெற 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆறு மாதங்களுக்குள் கிடைக்கும் வகையில் நிதி ஒதுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். ரிங் ரோடு உட்பட கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
குறுந்தொழில் வாரியம் அமைக்கணும்
சுருளிவேல், துணைத்தலைவர், டான்ஸ்டியா: மாவட்டம்தோறும் குறுந்தொழில் பேட்டைகள் அமைத்திட வேண்டும். சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க மானியத்தை அதிகரிக்க வேண்டும். கோவைக்கான புதிய மாஸ்டர் பிளானை உடனே அமல்படுத்த வேண்டும். கோவையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி, பெரிய தொழில்களை கோவைக்கு கொண்டு வர வேண்டும். குறு, சிறு தொழில்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.
கோரிக்கை விடுத்து களைத்துவிட்டோம்
திருமலை ரவி, தலைவர், கோஜிம்வா: 15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக் களைத்துவிட்டோம். எந்த அரசும் கண்டுகொள்வதாக இல்லை. 7 லட்சத்துக்கும் அதிகமானோர் கிரில் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். கோவையில் கிரில் தொழிலுக்கென, தனி தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக முதல்வரே அறிக்கை வெளியிட்டார். இதுவரை நடவடிக்கை இல்லை. இக்கோரிக்கைகளை, இந்த பட்ஜெட்டிலாவது அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.