/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காலராவில் இருந்து தப்ப என்ன செய்யலாம்' *மாவட்ட சுகாதார அலுவலர் அறிவுரை

ADDED : ஜூலை 01, 2024 01:32 AM
கோவை;காலராவில் இருந்து தப்ப என்ன செய்யலாம் என, மாவட்ட சுகாதார அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார்.
மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறியதாவது:
கலங்கலாக வரும் குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற குடிநீரால், காலரா ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அந்தந்த கிராமங்களில் உள்ள, சுகாதார ஆய்வாளர்கள் தங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, குடிநீரின் மாதிரி எடுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை துணை அலுவலகத்தில் உள்ள, ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அதில் ஏதாவது அறிகுறிகள் கண்டறியப்பட்டால், அந்த பகுதியில் உடனடியாக சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். வீடு மற்றும் பொது கழிப்பிடத்தை பயன்படுத்தினால், கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும்.
முடிந்த அளவு வெளி உணவு தவிர்க்க வேண்டும். வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு, ரத்த போக்கு, சோர்வு ஏற்பட்டால் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சோர்வு ஏற்படும் போது பருப்பு நீர், கஞ்சி, இளநீர், மோர், ஓ.ஆர்.எஸ்., கரைசல் எடுத்து கொள்ளலாம். பாலை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.