/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இட ஒதுக்கீட்டிற்கு என்ன செய்தது தி.மு.க.,?* ஆதாரங்களுடன் 'ஓ.பி.சி.,ரைட்ஸ்' கேள்வி
/
இட ஒதுக்கீட்டிற்கு என்ன செய்தது தி.மு.க.,?* ஆதாரங்களுடன் 'ஓ.பி.சி.,ரைட்ஸ்' கேள்வி
இட ஒதுக்கீட்டிற்கு என்ன செய்தது தி.மு.க.,?* ஆதாரங்களுடன் 'ஓ.பி.சி.,ரைட்ஸ்' கேள்வி
இட ஒதுக்கீட்டிற்கு என்ன செய்தது தி.மு.க.,?* ஆதாரங்களுடன் 'ஓ.பி.சி.,ரைட்ஸ்' கேள்வி
ADDED : ஜூலை 05, 2024 02:33 AM
கோவை;கடந்த, 30 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்காக தி.மு.க., என்ன செய்தது என, ஆதாரங்களுடன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு(ஓ.பி.சி., ரைட்ஸ்) கேள்வி எழுப்பியுள்ளது.
கூட்டமைப்பின் செயலாளர் திருஞானசம்பந்தம் அறிக்கை:தி.மு.க., வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மக்கள் மனம் புண்படும்படி தொடர்ந்து பேசி வருகிறார். இடஒதுக்கீட்டு அடிப்படை உரிமை குறித்த அடிச்சுவடு தெரியாமல் பேசுகிறார். பல லட்சம் இளைஞர்கள், கல்லுாரிகளில், படித்து கஷ்டப்பட்டு வாங்கிய பட்டங்களை 'தி.மு.க., போட்ட பிச்சை' என்றும், 'நாய் கூட பட்டம் பெறுகிறது' என, பேசியுள்ளார். இடஒதுக்கீட்டின் வரலாறை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.கடந்த, 1950 ம் ஆண்டு, அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், இடஒதுக்கீட்டை எங்களது அடிப்படை உரிமையாக்கினர். தமிழகத்தை பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்க செண்பகம், துரைராஜன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதையடுத்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், முதல் சட்ட திருத்த மசோதாவை அன்றைய முதல்வர் காமராஜர் கொண்டு வந்தார். இது தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தம். இதையடுத்தே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு இடஒதுக்கீட்டு சட்டங்கள் இயற்ற வழி பிறந்தது. கடந்த, 1980 ம் ஆண்டு முதல், அனைத்து பிற்படுத்தப்பட்ட(ஓ.பி.சி.,) மக்களின் இடஒதுக்கீட்டை, 50 சதவீதமாக உயர்த்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தமிழகத்தில் நடப்பில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்பு சட்டப்பாதுகாப்பு தந்து கவர்னரின் கையெழுத்தை பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெ.,சொல்லிக் கொள்ளும்படி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. இந்நிலையில், எங்கள் மக்களை, இளைஞர்களை, பட்டதாரிகளை, 'பிச்சைக்காரர்கள்' என்றும் 'நாய்கள்' என்றும் கூறும் அறிவாளி நீங்களும், உங்கள் இயக்கத்தினரும், ஓ.பி.சி., மக்களுக்காக கடந்த, 30 ஆண்டுகளில், என்ன செய்தீர்கள்? இதை மக்கள் புரிந்து கொள்ளும் நேரம் நெருங்குகிறது என்பதை அறிந்து கொள்ளவும்.இவ்வாறு, அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.