/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்னென்ன உணவு உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது?
/
என்னென்ன உணவு உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது?
ADDED : செப் 01, 2024 12:39 AM

முதுமை கால ஆரோக்கியத்திற்கு, உணவு முறையும் முக்கியமான ஒன்று. வயதாகும் போது உடலில் ஜீரண சக்தி குறைந்து விடும்.
அதற்கேற்ப உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியம். முதுமை காலங்களில் எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என, ஆலோசனை வழங்குகிறார், ஊட்டச்சத்து நிபுணர் ஜூலியட் ஷீபா.
முதுமை காலங்களில் எளிதாக ஜீரணம் ஆகும் உணவு எடுத்துக் கொள்வது நல்லது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரை, பச்சை நிறம் உள்ள காய்கறி, வாழைத்தண்டு, வாழைப்பூ சாப்பிட வேண்டும். பேலன்ஸ்டு டயட் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் சம அளவில் இருக்கும். தினமும், தண்ணீர் 3 லிட்டர் வரை கண்டிப்பாக குடிக்க வேண்டும். முடிந்தவரை தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி முதுமை காலத்தில் முக்கியம்.
முதுமை காலத்தில், பெரிய அளவில் வேலைகள் இருக்காது. உணவை எடுத்துக் கொண்டு வேலை இல்லாமல் இருப்பதால், கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதை தடுக்கவே உடற்பயிற்சி முக்கியம். வெளி உணவுகள், பேக்கரி உணவுகள், ஜங் புட் தவிர்க்க வேண்டும். பாக்கெட் உணவு சாப்பிடக் கூடாது. சமைத்த உணவுகளே நல்லது. அசைவ உணவுகளை எணணெயில் பொரித்ததை தவிர்த்து, கிரேவி போன்று உண்ணலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.