/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தவிர்க்க வேண்டியது மது தடை விதிக்க கூடாதது கள்'
/
'தவிர்க்க வேண்டியது மது தடை விதிக்க கூடாதது கள்'
ADDED : பிப் 26, 2025 11:40 PM

பொள்ளாச்சி: 'தவிர்க்கப்பட வேண்டியது மது; தடை விதிக்க கூடாதது கள்,' என, பொள்ளாச்சியில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொங்கல் நகரத்தில் கள் விடுதலை கருத்தரங்கம் நடைபெறுகிறது. இது குறித்து விவசாய அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, ஆதரவு அளிக்க கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வலியுறுத்தி வருகிறார்.நேற்று பொள்ளாச்சி வந்த அவர், விவசாய சங்கங்களுடன் கலந்தாலோசித்தார்.
அதன்பின், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பாலியல் குற்றங்களுக்கு போதைப்பொருள், மது தான் காரணமாக உள்ளது. பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்ட பின், அங்கு குற்றங்கள் குறைந்துள்ளன. கள்ளுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் மது விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருளான கள் விற்க தடை விதித்துள்ளது. இது எப்படி மக்கள் நலன் அரசாகும். போதை பொருளுடன் கள்ளை ஒப்பிடக்கூடாது. தவிர்க்க வேண்டியது மது; தடை விதிக்க கூடாதது கள்ளாகும்.
இது குறித்து, உடுமலை அருகே கொங்கல்நகரத்தில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், கள் ஆதரவாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

