தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘இன்டீரியர்’ பணிகளை எப்போது துவங்க வேண்டும்?

‘இன்டீரியர்’ பணிகளை எப்போது துவங்க வேண்டும்?

‘இன்டீரியர்’ பணிகளை எப்போது துவங்க வேண்டும்?


ADDED : ஜூன் 19, 2026 05:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* வீடுகளுக்கு நடுவே சுவர்கள் கட்ட பயன்படுத்தப்படும் ‘ஜிப்சம் பிளாக்’, பாரம்பரிய செங்கற்களை விட பாதுகாப்பானதா?

–விக்ரம்: கண்டிப்பாக பாதுகாப்பானது, பல நன்மைகளை கொண்டது. இதை ‘லைட் வெயிட் பார்ட்டிஷன்’ என்போம். வீட்டின் உள்பக்க தடுப்பு சுவர்களுக்கு ஜிப்சம் பிளாக்குகள் அல்லது ஏ.ஏ.சி., பிளாக்குகள் சிறந்தவை. எடை குறைவானவை என்பதால் கட்டடத்தின் ஒட்டுமொத்த எடையை குறைக்கும். நேரடியாக பட்டி பார்த்து, பெயின்ட் அடிக்கலாம். வீட்டுக்குள் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்.

* வீட்டு மொட்டை மாடியில் கோடையில் வெயில் தாங்க முடியவில்லை. என்ன தீர்வு?

–மகேஷ் குமார்: மொட்டை மாடி தரையின் மேல் ‘கூலிங் டைல்ஸ்’ பதிக்கலாம். இவை சூரிய கதிர்களை திருப்பி அனுப்பி, வீட்டுக்குள் வெப்பம் இறங்குவதை தடுக்கும். தவிர, பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு உயர்தர ‘ஹீட் ரெசிஸ்டன்ட் பெயின்ட்’ அடிக்கலாம். வீட்டின் உள் வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி வரை குறையும். ஏ.சி., மின் கட்டணமும் மிச்சமாகும்.

* புதிதாக வீடு கட்டும்போது இன்டீரியர் டிசைனரை எப்போது வேலைக்கு அழைக்க வேண்டும்?

–ஹரிஷ்: பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு, வீடு கட்டி முடித்த பின் இன்டீரியர் டிசைனரை அழைப்பது. வீடு கட்ட திட்டம் போடும்போதே சிவில் இன்ஜினியரையும், இன்டீரியர் டிசைனரையும் ஒன்றாக அமர வைக்க வேண்டும். உதாரணமாக, பெட்ரூமில் கட்டில் எங்கு வரப்போகிறது என்று டிசைனர் முதலிலேயே கூறினால், அதற்கேற்ப சுவிட்ச் பாக்ஸ் பாயின்ட்டுகள் மற்றும் ஜன்னல்களை இன்ஜினியரால் கச்சிதமாக அமைக்க முடியும். கட்டி முடித்த பின் இன்டீரியர் செய்ய நினைத்தால், ‘ஒயரிங்’ பணிக்காக புதிய சுவர்களை உடைக்க வேண்டியிருக்கும். பணமும், நேரமும் வீணாகும்.

* ‘ஓபன் கான்செப்ட்’ அதாவது, சுவர்கள் இல்லாத பெரிய ஹால் வீடுகள் மிகவும் பிரபலம். இதில் இருக்கும் சவால்கள் என்ன?

–சுவாதி: ‘ஓபன் கான்செப்ட்’ என்பது வீட்டின் எடையை தாங்கும் உள்பக்க சுவர்களை அகற்றி, இதற்கு மாற்றாக மேல் தளத்தின் எடையை வெளி சுவர்களுக்கு கடத்தும் வகையில், வலுவான பீம்களை வடிவமைப்பது. சுவர்கள் இல்லாத பெரிய இடத்தில் சமையலறை எது?, ‘லிவிங் ரூம்’ எது? என்பதை பிரித்துக்காட்ட வேண்டும். இதற்காக இன்ஜினியரிங் அமைப்புகளுக்கு ஏற்ப ‘பால்ஸ் சீலிங்’ தரை அல்லது லைட்டிங் மூலம் சுவர்கள் இல்லாமலேயே தனித்தனி பகுதிகளை உருவாக்க வேண்டும்.

* இப்போதெல்லாம் பில்லர்கள் வைத்து வீடு கட்டுவதுான் நன்மை என்கிறார்களே; ஏன்?

–பிரதாப்: இதை ‘பிரேம்டு ஸ்ட்ரக்சர்’ என்கிறோம். இதில் வீட்டின் மொத்த எடையும் பீம்கள் மற்றும் துாண்கள் வழியாக அஸ்திவாரத்திற்கு போகும். இதன் பெரிய பலன் என்னவென்றால் எதிர்காலத்தில் அறை அளவை மாற்ற வேண்டும் என்றாலோ அல்லது ஹாலை பெரிதாக்க வேண்டும் என்றாலோ, இடையில் இருக்கும் சுவர்களை தைரியமாக இடித்து மாற்றலாம். ஏனென்றால் சுவர்கள் இங்கே எடையை தாங்குவதில்லை. ஆனால், சாதாரண செங்கல் கட்டுமானத்தில் சுவர்களை மாற்றவோ இடிக்கவோ முடியாது. காரணம் கட்டடத்தின் மொத்த எடையும் அந்த சுவர்களில்தான் உள்ளது.

–பொறியாளர் குமரவேல்

கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம்(காட்சியா).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us