/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.என்.ஜி., பஸ்கள் எப்போது வரும்? டிரைவர்கள் எதிர்பார்ப்பு
/
சி.என்.ஜி., பஸ்கள் எப்போது வரும்? டிரைவர்கள் எதிர்பார்ப்பு
சி.என்.ஜி., பஸ்கள் எப்போது வரும்? டிரைவர்கள் எதிர்பார்ப்பு
சி.என்.ஜி., பஸ்கள் எப்போது வரும்? டிரைவர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 02, 2024 02:31 AM
- நமது நிருபர் -
டீசல் செலவை மிச்சப்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ள சி.என்.ஜி., பஸ்கள், திருப்பூர் மண்டலத்துக்கு எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டீசல் பயன்பாட்டை குறைக்கும் விதமாக, அரசு போக்குவரத்து கழகம் வாயிலாக, சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதற்கு முன்னோட்டமாக ராமநாதபுரம், சாயல்குடி, சென்னை, விழுப்புரத்தில் சி.என்.ஜி., பஸ் இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு, வெற்றி பெற்றதால், தொடர்ந்து சி.என்.ஜி.,யில் பஸ் இயங்கியும் வருகிறது.
இத்திட்டத்தில், பஸ்சில் இருக்கும் டீசல் டேங்க் அகற்றப்பட்டு, ஏழு கிலோ எடையளவு காஸ் நிரப்ப கூடிய ஏழு சிலிண்டர் பொருத்தும் வகையில், பஸ்களின் அமைப்பு மாற்றப்படுகிறது.
சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், சி.என்.ஜி., பஸ்களால் எரிபொருள் செலவு குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுதல் தவிர்க்கப்படுவதாக போக்குவரத்து கழகமே தெரிவித்துள்ளது.
பஸ்களுக்கான டீசல் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒரு லிட்டர் டீசலில், 5.7 கி.மீ., துாரம் இயக்க வேண்டும் என டிரைவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். ஆனால், பஸ்கள், 5.68 கி.மீ., டீசல் அளவே தருகின்றன.
டீசல் செலவு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், டிரைவர்களுக்கான நெருக்கடி தொடர்வதால், திருப்பூர் மண்டலத்தில் அதிகளவில் டீசல் 'குடிக்கும்' பஸ்களை கண்டறிந்து, அந்த வழித்தடங்களில் சி.என்.ஜி., பஸ்களை சோதனை முறையில் இயக்க வேண்டும் என்பது டிரைவர், நடத்துனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.