ADDED : ஜூன் 28, 2026 09:24 PM

அ நிறம் | அளவு
பில்லூர்: பில்லூர் அணையில் மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா ஆய்வு செய்தார். அணையின் நிலவரம், பராமரிப்பு உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பில்லூர் அணையில் தற்போது, 89 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. மழை இல்லாவிடினும் செப்., 20 வரை குடிநீர் விநியோகத்தில் சிக்கல் இருக்காது.
தற்போதைய நிலையில் விநியோகத்தில் எந்த பிரச்னையும் இல்லை. அணை பராமரிப்பே பெரும் சவால். அணையில் 60 சதவீதம் வண்டல் மண் படிந்துள்ளது.
துார் வாரினால் கூடுதல் தண்ணீரை எடுக்க முடியும். அணையை பராமரிக்கும் மின்சார வாரியம்தான் துார் வார வேண்டும். மாநகராட்சி ஒத்துழைக்க தயாராக உள்ளது. முதல்வரிடம் இந்த பிரச்னை நேரில் விளக்கப்படவுள்ளது. விரைவில் தீர்வு கிடைக்கும்’ என்றனர்.
