/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எங்கே... பிடிங்க பார்ப்போம்... வனத்துறைக்கு சிறுத்தை சவால்
/
எங்கே... பிடிங்க பார்ப்போம்... வனத்துறைக்கு சிறுத்தை சவால்
எங்கே... பிடிங்க பார்ப்போம்... வனத்துறைக்கு சிறுத்தை சவால்
எங்கே... பிடிங்க பார்ப்போம்... வனத்துறைக்கு சிறுத்தை சவால்
ADDED : ஏப் 07, 2024 11:39 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் காலம் ஆகியும், கூண்டில் சிறுத்தை சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது.
மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளிப்பாளையம் அருகில், சென்னாமலை கரட்டில் கடந்த மார்ச் 1ம் தேதி, கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது.
சிறுத்தையை பிடிக்க சிறுமுகை வனத்துறை சார்பில், அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. அதில் சிறுத்தை சிக்காததால், அருகில் வேறு ஒரு இடத்தில், கூண்டு இடமாற்றம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல்வேறு இடங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கு மேலாகியும், கூண்டில் சிறுத்தை சிக்காமல், போக்கு காட்டி வருகிறது.
சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், சிறுத்தைக்கு வைக்கப்பட்டுள்ள கூண்டில், சிறுத்தை இன்னும் சிக்கவில்லை. தொடர் கண்காணிப்பில் அப்பகுதி உள்ளது. பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில், எச்சரிக்கையுடன் வெளியே செல்ல வேண்டும்,'' என்றார்.-

