/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள்; வாழை மரங்களை சேதப்படுத்தின
/
நிலத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள்; வாழை மரங்களை சேதப்படுத்தின
நிலத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள்; வாழை மரங்களை சேதப்படுத்தின
நிலத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள்; வாழை மரங்களை சேதப்படுத்தின
ADDED : செப் 05, 2024 12:07 AM

மேட்டுப்பாளையம் : தோலம்பாளையம் பகுதியில் விளை நிலத்தில் புகுந்த காட்டுப்பன்றி, வாழைகளை சேதப்படுத்தியது.
காரமடை அருகே தாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்,39, விவசாயி. இவர் தோலம்பாளையத்தில், சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் வாழை, வெங்காயம், கத்தரி, மிளகாய் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில், இவரது விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள், நேற்று முன் தினம் ஏராளமான வாழைகளை சேதப்படுத்தியது.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த காரமடை வனத்துறையினர் காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த வாழைகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது காட்டுப்பன்றி, யானைகள், மான், மயில் உள்ளிட்டவைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
வனத்துறையினர் உடனடியாக இழப்பீடு வழங்குவதுடன் விளை நிலங்களில், வனவிலங்குகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.-