/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளக்ஸ் ஒட்டுமிடமாக மாறிய கட்டடம் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி
/
பிளக்ஸ் ஒட்டுமிடமாக மாறிய கட்டடம் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி
பிளக்ஸ் ஒட்டுமிடமாக மாறிய கட்டடம் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி
பிளக்ஸ் ஒட்டுமிடமாக மாறிய கட்டடம் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி
ADDED : பிப் 27, 2025 09:10 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான கட்டடம், தற்போது பிளக்ஸ் ஒட்டும் இடமாக மாறி வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே, நகராட்சிக்கு சொந்தமான கட்டடம், தனியார் துணிக்கடைக்கு குத்தகை அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டது. நகராட்சிக்கு வரி செலுத்தாத காரணத்தினால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடைக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
அதன் பின், இந்த கட்டடம் போதிய பயன்பாடின்றி வீணாகி வருவதுடன், போஸ்டர் ஒட்டுமிடமாக மாறியுள்ளது.
போட்டா போட்டி
அரசியல் கட்சியினர் போட்டி போட்டு தங்களது போஸ்டர், பிளக்ஸ்களை கட்டடம் முழுவதும் ஒட்டியுள்ளனர். அனைத்து கட்சியினரும், இலவச விளம்பரம் செய்யும் இடமாக அந்த கட்டடத்தை மாற்றியுள்ளனர்.
இதனால், கட்டடமே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள பிளக்ஸ்களை அகற்றி, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் எவ்வித அனுமதியும் இன்றி பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த கட்டடத்தில் பிளக்ஸ் வைக்கவோ, போஸ்டர் ஒட்டவோ கூடாது என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். கட்டடத்தை மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டால், பயனாக இருக்கும்,' என்றனர்.