/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனவாக மாறிய ராமேஸ்வரம் ரயில் இந்த ஆண்டாவது இயக்கப்படுமா?
/
கனவாக மாறிய ராமேஸ்வரம் ரயில் இந்த ஆண்டாவது இயக்கப்படுமா?
கனவாக மாறிய ராமேஸ்வரம் ரயில் இந்த ஆண்டாவது இயக்கப்படுமா?
கனவாக மாறிய ராமேஸ்வரம் ரயில் இந்த ஆண்டாவது இயக்கப்படுமா?
ADDED : மே 01, 2024 11:07 PM
உடுமலை : திண்டுக்கல் - பாலக்காடு மீட்டர்கேஜ் பாதையாக இருந்த போது, கோவை - பொள்ளாச்சி - உடுமலை வழியாக ராமேஸ்வரத்துக்கு, நாள்தோறும் ரயில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரயிலுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பும் இருந்தது. பழநி, மதுரை என ஆன்மிக தலங்களுக்கு செல்ல இந்த ரயில் பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில், மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில்பாதை பணிகளின் போது, இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராமேஸ்வரம் ரயில் மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால், பயணிகள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன், கோவை - பொள்ளாச்சி - பழநி - திண்டுக்கல் - மதுரை - ராமேஸ்வரம் செல்லும் வகையில், தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இக்கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.
ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்கினால், மதுரைக்கு நேரடி இணைப்பு கிடைக்கும்; விடுமுறை காலத்தில், ஏராளமான மக்கள் ராமேஸ்வரம் மற்றும் இதர ஆன்மிக தலங்களுக்கு எளிதாக செல்ல முடியும்.
எனவே, இந்தாண்டாவது ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை பகுதி பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

