/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்
/
சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்
ADDED : ஜூலை 25, 2024 12:22 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த சத்யவாணி - சுரேஷ் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் வசிக்கும் வீட்டை, சுரேஷ் விற்க முயற்சி செய்ததை அறிந்த சத்தியவாணி, சப் - ரிஜிஸ்டர் அலுவலகத்தில் சொத்தை விற்க தடங்கல் மனுவை கடந்த, 9ம் தேதி அளித்தார்.
ஆனால், சப்-ரிஜிஸ்டர் அந்த மனுவை விசாரிக்காமல், சுரேஷ்க்கு சாதகமாக கடந்த, 12ம் தேதி வேறு ஒரு நபருக்கு சொத்தை கிரயம் செய்து கொடுத்ததை அறிந்த சத்தியவாணி, இரு குழந்தைகளுடன் சப் -ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, சப்-ரிஜிஸ்டர் செல்வக்குமார் பேச்சு நடத்திய போது, கிரயம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என சத்யவாணி வலியுறுத்தினார். இதையடுத்து, சுரேஷிடம் அசல் பத்திரத்தை கொண்டு வர சொல்லி சப் - ரிஜிஸ்டர் உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும், என சப் - ரிஜிஸ்டர் தெரிவித்ததையடுத்து, தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.