/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் குவிந்தது
/
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் குவிந்தது
ADDED : ஆக 20, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை கோரும் விண்ணப்பங்களுடன் ஏராளமான பெண்கள் திரண்டனர். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 752 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 300க்கும் மேல், மகளிர் உரிமைத்தொகை மனுக்கள்.
வழக்கமாக பொதுமக்களிடமிருந்து, 500 மனுக்களே பெறப்படும். உரிமைத்தொகை கோரும் விண்ணப்பங்கள் அதிகரிப்பால், மனுக்களை ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்து பதிவு செய்ய அலுவலர்கள் திணறினர்.
கடந்த 17ம் தேதி மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெற முகாம் நடப்பதாக பரவிய வதந்தியை நம்பி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் திரண்டது குறிப்பிடத்தக்கது.
-நமது நிருபர் -