/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு மாடு தாக்கி சிகிச்சை பெற்ற தொழிலாளி உயிரிழப்பு
/
காட்டு மாடு தாக்கி சிகிச்சை பெற்ற தொழிலாளி உயிரிழப்பு
காட்டு மாடு தாக்கி சிகிச்சை பெற்ற தொழிலாளி உயிரிழப்பு
காட்டு மாடு தாக்கி சிகிச்சை பெற்ற தொழிலாளி உயிரிழப்பு
ADDED : மார் 06, 2025 09:50 PM

வால்பாறை; வால்பாறை அருகே காட்டுமாடு தாக்கி காயமடைந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது வால்பாறை. கேரள மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட்டில், தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் சஞ்சய்,24, இவர் ஜார்கண்ட் மாநிலத்தைச்சேர்ந்தவர்.
கடந்த, 2ம் தேதி இரவு, 7:00 மணிக்கு அங்குள்ள கடைக்கு இவர் சென்று பொருட்களை வாங்கி வீட்டிற்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த காட்டுமாடு, அவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு, 11:00 மணிக்கு சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மளுக்கப்பாறை வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.