தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கரடி தாக்கியதில் தொழிலாளி காயம் 

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம் 

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம் 


ADDED : ஜூன் 28, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 03:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அப்பர் பாரளை எஸ்டேட்டில் தேயிலைச்செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணிக்காக, ஆறு பேர் வாகனத்தில் சென்றனர்.

அங்கு, 1ம் நம்பர் பீல்டு குறுக்குப்பாதையில் சென்ற அசாம் மாநில தொழிலாளி தில்வர் அலி,45, என்பவரை, செடிகளுக்குள் இருந்த கரடி தாக்கியது. அதில், படுகாயமடைந்த தொழிலாளியின் அலறல் சப்தம் கேட்டு அருகே இருந்த சக தொழிலாளர்கள் ஓடிச்சென்றனர்.

கரடி தேயிலை தோட்டத்துக்குள் சென்ற நிலையில், அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் குறித்து, வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் வனத்துறையினர் விசாரித்தனர். காயமடைந்தவருக்கு வால்பாறை வனச்சரகர், 10 ஆயிரம் ரூபாய் அரசு நிவாரண நிதியை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us