/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.எப்.ஜி.டி.பி.,யில் உலக மண் தினம்
/
ஐ.எப்.ஜி.டி.பி.,யில் உலக மண் தினம்
ADDED : டிச 07, 2024 06:15 AM

கோவை; கோவை இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு மைய வளாகத்தில் உள்ள சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் சார்பில், உலக மண் தினம் கொண்டாடப்பட்டது.
மண் தினத்தை முன்னிட்டு, கடந்த நவ., 18ம் தேதி முதல் நேற்று வரை 'மண் மீதான அக்கறை: அளத்தல், கண்காணித்தல், நிர்வகித்தல்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்குகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மண்ணின் முக்கியத்துவம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை, சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மைய தலைமை விஞ்ஞானி ரேகா வாரியர், முதுநிலை திட்ட அதிகாரி விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.