/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை பெய்ய வேண்டி கோவிலில் வழிபாடு
/
மழை பெய்ய வேண்டி கோவிலில் வழிபாடு
ADDED : மே 01, 2024 11:03 PM
கிணத்துக்கடவு : மழை பெய்ய வேண்டி கிணத்துக்கடவு, பட்டணம் கிராமத்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கிராமப்புறங்களில் இருக்கும் குட்டை, நீரோடை, கிணறுகள் மற்றும் போர்வெல்லில் தண்ணீர் குறைந்து வருகிறது. சில இடங்களில் தண்ணீர் வற்றி, வறண்ட நிலையில் காணப்படுகிறது.
இதை தவிர்க்கும் பொருட்டு, கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி, பட்டணம் கிராமத்தில், மழை வேண்டி விநாயகர் கோவிலில், விநாயகரை சுற்றி சுவர் போன்ற அமைப்பை உருவாக்கி அதில் நீரை ஊற்றி, விநாயக பெருமானை மூழ்க வைத்து, ஊர் பொதுமக்கள் வழிபட்டனர்.
மேலும், கோடையில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கவும், மழை பெய்து குட்டை மற்றும் கிணறுகளில் தண்ணீர் நிரம்பவும் அப்பகுதியினர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

