/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்ம னு க்கு பூவோடு எடுத்து வழிபாடு
/
மாரியம்ம னு க்கு பூவோடு எடுத்து வழிபாடு
ADDED : பிப் 28, 2025 11:08 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கடந்த, 11ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தேர்த்திருவிழா துவங்கியது. கடந்த, 18ம் தேதி கம்பம் நடப்பட்டது. கம்பத்துக்கு வேப்ப இலை கலந்த மஞ்சள் நீரை ஊற்றி, பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து, பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
முதல் நாளான நேற்று கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் சார்பில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர்.
தேரில் எழுந்தருளிய அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பூவோடு எடுத்து வந்த பக்தர்கள், அம்மனை வழிபட்டு தெப்பக்குளம் அருகே பூவோடு இறக்கினர். தொடர்ந்து ஒவ்வொரு பகுதியில் இருந்தும், பக்தர்கள் பூவோடு எடுக்கவுள்ளனர்.
கோவிலில், இன்று கொடி கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் மார்க்கெட் ரோட்டில் திருவிழாவையொட்டி, பூவோடு மற்றும் அலகு குத்தும் திருவிழா நடக்கிறது.
நாளை, 2ம் தேதி ஏ.பி.டி., பூவோடு எடுத்தல், 3ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஆயக்கால் போடுதல், 4ம் தேதி மகுடம் வைத்தல்; 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் துவங்குகிறது.
வரும், 6ம் தேதி இரண்டாம் நாள் தேரோட்டம், 7ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டம், தேர்நிலைக்கு வருதல், பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது.8ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், 10ம் தேதி மகா அபிேஷகமும் நடக்கிறது.