/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களுக்கான யோகா ஆளுமை பயிற்சி துவக்கம்
/
பெண்களுக்கான யோகா ஆளுமை பயிற்சி துவக்கம்
ADDED : ஆக 20, 2024 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்;வாழும் கலை அமைப்பு சார்பில், பெண் களுக்கான யோகா மற்றும் ஆளுமை பயிற்சி துவங்கியது. வாழும் கலை அமைப்பு மற்றும் முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், பெண்களுக்கான யோகா மற்றும் ஆளுமை பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
வரும், 24 ம்தேதி வரை நடக்கும் முகாமில், சுதர்சன கிரியா பயிற்சி, உடல் மற்றும் மனதை பலப்படுத்தும் யோகாசனங்கள், நோய் எதிர்ப்பு சக்தி பயிற்சி மற்றும் பல வகையான ஆளுமை பயிற்சிகளை ஆசிரியர் பூங்கோதை அளித்தார்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, 70க்கும் மேற்ப்பட்ட பெண்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

