/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீங்களும், இனி வாக்காளர் தான்! அக்., 18 வரை பெயர் சேர்க்கலாம்; திருத்தலாம்
/
நீங்களும், இனி வாக்காளர் தான்! அக்., 18 வரை பெயர் சேர்க்கலாம்; திருத்தலாம்
நீங்களும், இனி வாக்காளர் தான்! அக்., 18 வரை பெயர் சேர்க்கலாம்; திருத்தலாம்
நீங்களும், இனி வாக்காளர் தான்! அக்., 18 வரை பெயர் சேர்க்கலாம்; திருத்தலாம்
ADDED : ஆக 22, 2024 11:50 PM
கோவை;ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் விபரங்கள் சரிபார்க்கும் பணியை துவங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் இப்பணிகள் துவங்கின. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியையும் திருத்தியமைப்பது, மறுசீரமைப்பது, வாக்காளர் பட்டியலில் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குவது, தரமற்ற போட்டோக்களுக்கு பதிலாக புதிய போட்டோக்களை இணைப்பது, ஓட்டுச் சாவடி எல்லைகளை மறுசீரமைத்து பட்டியல் குறித்து ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று வாக்காளர் விபரம் சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பணிகள் அக்., 18- வரை நடைபெறும். இதையடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல், அக்.,29ல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அந்தந்த வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகங்களில் வெளியிப்படும்.
வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சரியான முறையில் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஓட்டுசாவடிகள், ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் சரிபார்க்கலாம். இது தொடர்பான வாக்காளர்களுக்கான வேண்டுகோள்களை அக்., 29 முதல் நவ., 28 தெரிவிக்கலாம். இதற்கு டிச.,24 தேதி கடைசி. இறுதி வாக்காளர் பட்டியல், 2025 ஜன.,6ல் வெளியிடப்படுகிறது.
''
கடைசி நாள் வரை
காத்திருக்காதீர்
வாக்காளர்கள் தங்களது பெயர்களை எளிதாக இணைத்துக்கொள்ளலாம். திருத்தம் செய்ய முகவரி மாற்றம் செய்ய விரிவான, விரைவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இதை வாக்காளர்கள் அதிகம் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம். உங்களை தேடி வரும் அதிகாரிகளிடமோ அல்லது இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பங்களை சமர்பித்து பயனடையலாம்.
--- - கிராந்திகுமார்,
கலெக்டர், கோவை

