sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்! ரஜினி கருத்துக்கு கோவை மக்கள் வரவேற்பு

/

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்! ரஜினி கருத்துக்கு கோவை மக்கள் வரவேற்பு

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்! ரஜினி கருத்துக்கு கோவை மக்கள் வரவேற்பு

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்! ரஜினி கருத்துக்கு கோவை மக்கள் வரவேற்பு


ADDED : ஆக 27, 2024 12:43 AM

Google News

ADDED : ஆக 27, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செ ன்னையில் நடந்த தி.மு.க., நுால் வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, 'சீனியர் மாணவர்கள் பள்ளியை விட்டு போக மறுக்கின்றனர்' என, மூத்த அரசியல்வாதிகள், இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்பதை, மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிக்கு பதிலடியாக, 'மூத்த நடிகர்கள் பல் விழுந்து, சாகிற நிலையில் நடித்து வருவதாக', தி.மு.க., மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, கோவையில் சிலரிடம் பேசினோம்...!

பயந்து ஓடியவர்

தி.மு.க., கட்சியில் மூத்த தலைவர்கள், இளைஞர்களை விட சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அதே சமயம் இளைஞர்களுக்கு வழிவிட்டு தான் இருக்கிறார்கள். தி.மு.க., கட்சியில் அடுத்து ஆளப்போவதும் இளைஞர்கள் தான். ரஜினி நகைச்சுவையாக கூறியிருந்தாலும், அரசியலுக்கு வருவதாக கூறி பயந்து சென்றவரின், அரசியல் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

- அஸ்லாம் பாஷா கவுன்சிலர், தி.மு.க.,

ரஜினியின் கருத்து தவறு

ரஜினி கூறியது அவரது வாழ்க்கைக்கே பொருந்தாது. நியாயப்படி அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அரசியலுக்கு, பொது வாழ்க்கைக்கு ஓய்வே கிடையாது. இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்ற கருத்து நல்லதுதான். ஆனால் இளைஞர்களை வழி நடத்த, மூத்த அரசியல்வாதிகள் வேண்டும். அவரது கருத்து தவறு.

- ஹரிகரசுதன் தேசிய ஒருங்கிணைப்பாளர், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ்

இளைஞர்கள் வரணும்

ரஜினியின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது. மூத்த அரசியல்வாதிகளே தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாகவும், எம்.பி.,யாகவும் இருந்து வருகிறார்கள். இதனால் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறைந்து விடும். இளைஞர்கள் கையில் அரசியல் கிடைத்தால்தான், நாடு முன்னேறும். மூத்த அரசியல் வாதிகள் ஓய்வு பெறுவதற்குள், இளைஞர்களுக்கு வயதாகி விடும்.

-பாஸ்கரன் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர்.

இளைஞர்களால் மாற்றம் வரும்

புதியவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் மாற்றம் வரும். எப்போதும், இட்லி அல்லது தோசையே சாப்பிட்டவர்களுக்கு, பிற உணவின் சுவை தெரியாது. அதுபோல தான், பழைய கட்சிகள், அரசியல் தலைவர்களின் நடைமுறையை மட்டுமே பார்த்து வருகிறோம். தற்போது, சிலர் புதிதாக அரசியலுக்கு வருகின்றனர். நடிகர் விஜய்யின் வருகை, பல இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தும்.

- கதிரேசன் தொழில்முனைவோர்

இளைஞர்கள் தேவை

மூத்த அரசியல்வாதிகளுக்கு, இப்போது உள்ள தொழில் நுட்பங்கள் தெரியாது. ஏ.ஐ., சமூக வலைதளம் என இளைஞர்கள், உலகையே கையில் அடக்கி வைத்துள்ளனர். புத்தகங்களை மட்டும் படித்த மூத்த அரசியல்வாதிகளுக்கு, தொழில் நுட்பத்தை கற்றுக் கொடுக்க இளைஞர்கள் தேவை. அதற்கு பதிலாக, இளைஞர்களுக்கு அரசியல் கற்றுக்கொடுத்தால், அரசியலில் பல முன்னேற்றம் ஏற்படும்.

- செல்வகுமார் பயிற்சி ஆசிரியர்

மூத்தவர்கள் வழிகாட்டணும்

இளம் தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்பது வரவேற்கத்தக்கதே. அதற்காக, அனுபவம் வாய்ந்தவர்களை, கட்சிக்காக உழைத்தவர்களை, வயதானவர்கள் என புறம்தள்ளி விடக்கூடாது. அவர்களின் வழிகாட்டுதலோடு, அடுத்த தலைமுறைக்கு அரசியலை பழக்குவதுதான் சரியானதாக இருக்கும். மூத்தவர்களும் தாங்களாக முன்வந்து, இளைஞர்களுக்கு வழிகாட்டி, வளர்த்துவிட வேண்டும்.

- ரஞ்சித் தொழில் முனைவோர்

மூத்தவர்களும் வேண்டும்

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மூத்தவர்களும் வேண்டும். பல மூத்த அரசியல்வாதிகள் தான் நாட்டை நல்ல முறையில் வழி நடத்தி உள்ளார்கள். அதே சமயம், தற்போது அரசியலில் இளைஞர்கள் அதிகமாக ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ரஜினி பேசும் போது, மூத்தவர்கள் வேண்டாம் என கூறவில்லை. அவர்களின் திறமையை பாராட்டி இருந்தார்.

- சுரேந்தர் டிரைவர்






      Dinamalar
      Follow us